கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டது.

அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றனர்.

அந்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,