எஸ்.ஏ.சந்திரசேகரனின் படத்தில் விஜய் ஆண்டனி!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம், டிராபிக் ராமசாமி. கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக ரோகிணி நடிக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ், உபாசனா இன்னொரு ஜோடி. காமெடி நீதிபதியாக அம்பிகா மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர்.

அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் சமூக அக்கறையுள்ள இளைஞனாக, சினிமா நடிகராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். விஜய் விக்ரம் இயக்குகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,