வாட்ஸ்அப் அப்டேட்: இது வழங்காமலே இருந்திருக்கலாம்

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், இந்த அம்சம் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் என்ற வகையில் புதிய அப்டேட் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவலை திரும்பப்பெறுவது அல்லது நிரந்தரமாக அழிக்கும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் இந்த வசதி வழங்கப்பட்டது. அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பல்வேறு நிபந்தணைகள் விதிக்கப்பட்ட நிலையில், ஏழு நிமிடங்களுக்குள் குறுந்தகவல்களை அழிக்க வேண்டும் என வாட்ஸ்அப் சார்பில் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பிய குறுந்தகவல்களை அழித்தாலும், ஸ்மார்ட்போனில் இருக்கும் என்றும் இதனை மிக எளிமையாக இயக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு ஆண்ட்ராய்டு வலைபக்கத்தில் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டாலும், போனின் நோட்டிபிகேஷனில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுந்தகவலை அனுப்பியவர் அதனை அழித்திருந்தாலும் அதனை பெறுவோர் மிக எளிமையாக பார்க்க முடியும் என வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் குறுந்தகவல்களை அனுப்பியவர் அதனை அழித்திருந்தாலும், இவை ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் நோட்டிபிகேஷனில் பதிவு செய்யப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பி அதன் பின் அழித்த குறுந்தகவல்களை படிப்பது எப்படி?

– கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் நோட்டிபிகேஷன் ஹிஸ்ட்ரி (Notification History) எனும் செயலியை கொண்டு மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பி, அதன்பின் அழித்த வாட்ஸ்அப் குறுந்தகவல்களை யார் வேண்டுமானாலும் படிக்க முடியும் என ஸ்பெயின் நாட்டு ஆண்ட்ராய்டு வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– செயலியை டவுன்லோடு செய்ததும், ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷனில் தேட வேண்டும். நோவா போன்ற மூன்றாம் தரப்பு லான்ச்சர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது மேலும் எளிமையாக இருக்கும்.

– நோட்டிபிகேஷன் லாக் எவ்வித செயலியும் இன்றி இயக்க முடியும். இதற்கு ஹோம் ஸ்கிரீனினை அழுத்தி பிடிக்க வேண்டு்ம் இனி Widgets > Activities > Settings > Notification log ஆப்ஷன்களில் செல்ல முடியும்.

– ஸ்டாக் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள நோட்டிபிகேஷன்களிலேயே இயக்க முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,