அரசியலில் குதிக்கும் நயன்தாரா!

ராதிகா, ரேவதி, குஷ்பு, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் குதித்துள்ளனர். கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகள் அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அரசியல் பக்கம் தலைகாட்டாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. அவரும் தற்போது அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பேச்சு பரவி வருகிறது. சமீபத்தில் கோபி நயினார் இயக்கிய, ‘அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்தார் நயன்தாரா.

அந்த பதவியை கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ளும் நிலை உருவாகிறது. இதையடுத்து கலெக்டர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலில் குதித்து அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் நடைபோடுவதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதில் அரசியலில் குதித்து முதல் அமைச்சர் ஆகும் காட்சியில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

நயன்தாராவை சில வருடங்களுக்கு முன்பே தங்கள் கட்சியில் சேர்க்க ஒருசில அரசியல் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் அதிலிருந்து அவர் நழுவிச் சென்றதாகவும் பேசப்பட்டது. தற்போதுள்ள சூழலில் திடீரென அரசியலில் குதிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமூகத்தின் மீதும், சில அரசியல்வாதிகளின் போக்கை விமர்சிக்கும் வகையிலும் தன் கோபத்தை படத்தில் வெளிப்படுத்தும் வகையில் அறம் 2ம் பாகம் இயக்க இயக்குனருக்கு நயன்தாரா கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் பட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,