தேசியக்கொடி ஏற்ற மறுத்த வடக்கு கல்வி அமைச்சருக்கு எதிராக விசாரணை?

வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக்கொடியை ஏற்ற மறுத்திருப்பது தொடர்பில் உடன் விசாரணை ஒன்றை நடத்தும் பொறுப்பு வட மாகாண ஆளுநருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா, ‘மாகாண சபைகளின் அமைச்சர்கள் அரசியலமைப்பை ஏற்பதாகவே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறான நிலையில், தேசியக் கொடியை ஏற்றாது, அதனை புறக்கணித்திருப்பதனூடாக அந்த அமைச்சர் அரசியலமைப்பை மீறியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை நல்லிணக்கம் என்பன தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள அமைச்சர் ஒருவர் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, நல்லிணக்கம் என்பனவற்றுக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.இதற்கு முதலமைச்சர் முதலில் பொறுப்புக் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,