கோட்டாபய முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார்:அரசியலில் இருந்து விலக போகிறேன்:விமலவீர திஸாநாயக்க

மாற்றத்தை கோரி போராட்டம் நடத்தியவர்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வரை அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து விலகி இருக்கும் முடிவுக்கு அமைய நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எம்மை போன்ற தலைவர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது போராட்டகார்களின் தேவையாக இருந்தால், அதற்கு இணங்க நான் செயற்படுவேன்.

அமைப்பு ரீதியான மாற்றத்தை கோரி இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்ட வேண்டும். அரசியலில் இருந்து விலகி அதனை நோக்கி நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.
முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டாம் என கோட்டாபயவிடம் கூறினேன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்தார். முகநூலை பார்த்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன்.
முகநூலில் இருப்பது பொய் மற்றும் மூட நம்பிக்கை எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.