சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

நந்தலால் வீரசிங்கவை மேற்கோள் காட்டி பணவீக்கம் தொடர்பாக சமூக ஊடக தளங்களில் பரவி வரும் புதிய அறிக்கை குறித்து இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி பொறுப்பல்ல

நந்தலால் வீரசிங்கவால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் சிங்கள மொழிபெயர்ப்புகள் இணையத்தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் இந்த நாட்களில் பரவி வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் “பணவீக்கம் ஒரு பிரச்சினையல்ல, ஆனால் ஒரு தீர்வாகும்.. இந்தப் பொருளாதார நெருக்கடி எமக்கு ஏற்பட்ட மிகச் சிறந்த விஷயமாக இருக்கலாம் – மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார்” என்ற தலைப்பில் கட்டுரைகள் அல்லது இது போன்ற தலைப்புகளில் பரவி வருகின்றன.

கலாநிதி நந்தலால் வீரசிங்க என்ற போர்வையில் பிற நபர்களால் எழுதப்பட்ட “பணவீக்கம் ஒரு பிரச்சினையல்ல, ஆனால் தீர்வு” என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்கவோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ பொறுப்பல்ல என்று இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.  


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!