எலும்புத் துண்டுகளை சுவைத்து சுமையை ஏற்ற மாட்டோம்!

பாராளுமன்றத்தில் உள்ள பிரதான குழுக்களின் தலைவர் பதவிகளை, எதிர்க்கட்சி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளைப் பெறாது அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
    
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அமைச்சு பதவிகள் என்ற எலும்புத் துண்டுகளைப் சுவைத்து நாட்டு மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் எனவும், நாட்டு மக்களின் குரல்கள் எமக்குக் கேட்கும். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எமக்கு தெரியும். எனவே நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

நாடு நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வரும் இந்நிலையில் நாட்டு மக்களோடு கரங்கோர்ப்பதற்கு எமக்கு அமைச்சுப் பதவிகள் அவசியமில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்குப் பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களின் தலைவர் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அறிய முடிகிறது. அதனை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!