பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார். முன்னதாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழஙினார். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொளை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!