சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக் கூடாது! வெளியாகியுள்ள எதிர்ப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்க கூடாது என வலியுறுத்தி பிளக் கெப் மூமென்ட் அமைப்பினர் இன்று(18) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதுடன், அதில் நாமல் ராஜபக்சவிற்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நாமல் ராஜபக்சவிற்கு அமைச்சு பதவி வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னோடியாக செயற்பட்ட பிளக் கெப் மூமென்ட் அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் தனித்தனியாக அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் அடங்கிய குழுவினரை கொண்ட அமைச்சரவை கொண்ட தேசிய அரசாங்கத்தை அடுத்த வாரம் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைந்து கொள்வதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையினால் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ள 16 உறுப்பினர்களின் பட்டியலை பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச, எஸ். எம். சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சர் பதவிகள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட சிலர் எந்த வகையிலும் இந்த யோசனைக்கு இணங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.குறிப்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல்,, மகிந்தானந்த, ரோஹித்த ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டால், மீண்டும் போராட்டம் ஆரம்பிக்க அது வழிவகுக்கும் என அவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னோடியாக செயற்பட்ட பிளக் கெப் மூமென்ட் அமைப்பினர் சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக் கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக் கூடாது! வெளியாகியுள்ள எதிர்ப்பு