நாடு திரும்ப கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
    
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!