ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுள்ள CID பிரிவினர் – பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி கலவரக்காரர்களால் ஜனாதிபதியின் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இதுவரை சிரச தொலைக்காட்சி குழுமத்தின் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.அத்துடன் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர் விசாரணைகள் மூலம் பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்ற விசாரணைப் பிரிவில் அண்மையில் ஜுலியன் போலிங் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன் வர்த்தகரான ஜொனதன் மார்டென்ஸ்டைன் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!