விஜய் சேதுபதியுடன் இணையும் நேகா சர்மா!

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜுங்கா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் தொடங்கி நடைபெற்று வந்தது. விஜய்சேதுபதி ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக சோலோ படத்தில் நடித்த நேகாசர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: