ஒன்றரை கிலோ எடையுள்ள தலைமுடியை விழுங்கிய அதிசய பெண்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் வலி ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு 5 மருத்துவர்கள் கொண்ட குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ எடை கொண்ட தலைமுடியை நீக்கினர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் தனது தலை முடியை அவர் கடித்து தின்றுள்ளார். அது வயிற்றினுள் சென்று பந்து போன்று உருவாகியுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் அப்பெண்ணில் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என அவர் கூறினார். பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ எடை கொண்ட முடி இருந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,