ரணிலின் உத்தரவை ஏற்ற கோட்டாபய!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் வருகை

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில வாரங்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பார். ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, கோட்டாபய இன்று நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவித்தமை பொய்யானது எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்காக மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், அது பொய்யானது எனவும், சில மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மாத்திரமே தற்போதும் அங்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட தகவல்

தாய்லாந்து சென்றடைந்த பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள், கோட்டாபயவுக்கு பணிப்புரை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்பின் கீழ் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!