இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுமார் 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் 31,105 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மொத்தமாக 489,775 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 47,293 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!