இடைக்கால வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது!

ஸ்திரமான அரசாங்கம் இல்லாது இடைக்கால வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
    
6 மாதங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானங்களை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ளது. யோசனைகளை நடைமுறைப்படுத்த ஸ்திரமான அரசாங்கம் தேவை. கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இலங்கைக்கு வந்து கல்வி கற்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனை நாம் எதிர்க்க மாட்டோம்.

ஆனால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு முன்பாக உள்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!