காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. மேலும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் யாரும் போட்டியிடப்போவது இல்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
   
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தாலும், தனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என ராகுல் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப கட்சி என்ற விமர்சனம் வலுவாக இருக்கும் என்பதால் பிரியங்காவும் தலைவராக வரமாட்டார். இந்நிலையில், காந்தி குடும்பத்தினரின் ஆதரவுடன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளது. காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் இல்லை என்றால் ஜி23 தலைவர்கள் வேட்பாளரை நிறுத்தலாம். அதில் சசி தரூர் மற்றும் மணீஷ் திவாரியின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

ராகுல் அல்லது பிரியங்கா போட்டியிட்டால், வாக்குகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும், ஆனால் கெலாட் போட்டியிட்டால் அப்படி நடாக்காது என ஜி23 தலைவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.தனது ஆதரவுக்காக மாநில கட்சித் தலைவர்களை சசிதரூர் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். தரூரின் போட்டியை வரவேற்பதாக காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!