தகவல் திருட்டை தடுக்க புதிய செயலியை அறிமுகம் செய்தது கூகுள்!

ஆண்ட்ராய்டு செல்போன்களில் (malware)மால்வேர்க்கள் மூலம் தகவல்களை திருடும் கும்பல்களின் செயல்பாடுகளை கண்டறிந்து முற்றாக முடக்கவதற்கான செயலி ஒன்றை கூகுள் நிறுவனத்தின் இணைய பாதுகாப்புப் பிரிவு உருவாக்கியுள்ளது. கென்யா, நைஜீரியா, தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் malwareகளை பரப்பும் கும்பல் அதிகளவில் உள்ளன. இவர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்ட செல்போன்களில் malware களை பரப்பி தகவல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுப்பதற்காக tizi என்று பெயரிடப்பட்டுள்ள செயலியை கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது. முதலில் சமூக வலைத்தளங்கள் மூலம் கூகுள் நிறுவனம் அந்த குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்த tizi செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த tizi செயலி மூலம் malware களை பரப்ப முடியும் என்பதால், அந்த ஆப்ரிக்க தகவல் திருட்டு கும்பல்கள் வேகம் வேகமாக பயன்படுத்த தொடங்குகின்றன. அப்போது tizi செயலிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து அந்த கும்பல்கள் திருடிய தகவல்களை கூகுள் நிறுவனம் திருடி அதனை பாதுகாப்பதோடு, malwareகளை பரப்பும் கும்பல்களின் செயல்பாடுகளையும் முற்றாக முடக்குகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,