நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்

இலங்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறுத்தலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம்.

டெங்கு, கோவிட், இன்புளுவன்சா மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருவதால், அவற்றை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனவே மருத்துவ பரிந்துரைகள் இன்றி சிகிச்சை எடுப்பது மிகவும் ஆபத்தானது. மழையுடன் கூடிய காலநிலையுடன், டெங்கு, கொவிட் மற்றும் இன்புளுவன்சா நோய்களின் பரவல் அதிகரிக்கக்கூடும்.
எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!