ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும்: அலி சப்ரி நம்பிக்கை

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் ஓரிரு வாரங்களில் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகத்தில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“புதிய திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் மற்றும் பங்கேற்பு நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வரும்.சட்டமாக மாறுவதற்கு, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

இந்த யோசனை, பல தசாப்தங்களில் நாட்டின் மோசமான நிதி நெருக்கடியால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தணிக்கவும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தமானது, அரசியலமைப்பு சபையையும், ஒன்பது சுயாதீன ஆணைக் குழுக்களையும் மேம்படுத்தும்.இந்தநிலையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும், அரச நிறுவனங்களின் மேற்பார்வையை அதிகரிக்கவும், ஊழல் எதிர்ப்பு விசாரணைகளை வலுப்படுத்தவும் இந்த ஆணைக்குழுக்கள் செயல்படும்.”என கூறியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!