பட்ஜெட் விலையில் ஐபேட்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்?

ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு விலை குறைந்த ஐபேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு 9.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ரூ.28,000 விலையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 9.7 இன்ச் ஐபேட் விலை குறைந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய விலை குறைந்த ஐபேட் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இதர நாடுகளிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

விலை குறைந்த ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்வதன் மூலம் சில சந்தைகளை புதுப்பிக்க முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவன டேப்லெட் சந்தையில் சரிவு ஏற்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான சாதனங்கள் இந்த நிலையை சற்று மாற்றியிருந்தாலும், புதிய ஐபேட் வெளியீடு இதனை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலை காம்பால் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் இந்த சாதனம் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அதாவது ஏப்ரல், மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஆப்பிள் ஐபேட் வைபை வசதி கொண்ட 32 ஜிபி, 9.7 இன்ச் விலை ரூ.28,000 மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.35,700 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. செல்லுலார் 9.7 இன்ச் ஐபேட் விலை ரூ.38,600 மற்றும் ரூ.46,300 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய ஆப்பிள் 9.7 இன்ச் ஐபேட் அலுமினியம் யுனிபாடி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே, 2048×1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் A9 சிப்செட், மற்றும் M9 மோஷன் கோ-பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 5P லென்ஸ் பானரோமா, டைமர், ஹைப்ரிட் IR ஃபில்ட்டர் மற்றும் பல்வேறு இதர கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஃபுல் எச்டி தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கொண்ட ஐபேட் 1.2 எம்பி ஃபேஸ் டைம் எச்டி கேமரா f/2.2 அப்ரேச்சர் மற்றும் எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியை கொண்டுள்ளது. இந்த சாதனம் 32.4 Wh கழற்ற முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,