ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டம்!

காய்ச்சல் (influenza) தடுப்பூசிகளைப் போலவே கோவிட் பூஸ்டர்களும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்படலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். கடந்த வாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) அங்கீகரித்து, கொரோனா வைரஸின் அசல் திரிபு (original strain) மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் BA.4 மற்றும் BA.5 வரிசைகளுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட இருவேறு தடுப்பூசிகளை அங்கீகரித்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
   
அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் வைஸுடன் ஓவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைகக் கொண்டு, வருடாந்திர இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் போலவே கோவிட் தடுப்பூசியையும் போடும் பாதையை நோக்கி நகர்கிறோம் என்று கூறியுள்ளார்.அதே சமயம், வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அடிக்கடி அதிக ஊசிகள் தேவைப்படலாம்.

வெள்ளை மாளிகையின் கோவிட் ஒருங்கிணைப்பாளரான ஆஷிஷ் ஜா, இதை எளிமையாக சொல்லவேண்டுமானால் நீங்கள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், இதற்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டிருந்தால், இப்போது பூஸ்டர் போட வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.

“நீங்கள் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தடுப்பூசி போட்டிருந்தால், சில மாதங்கள் காத்திருப்பது நியாயமானது” என்று அவர் மேலும் கூறினார்.மக்கள் காய்ச்சலுக்கான பூஸ்டர் ஊசிகளை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் கோவிட் பூஸ்டரைப் பெறலாம் என்று அவர் கூறினார்

“இதனால்தான் கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்தார், ஒன்று காய்ச்சல் தடுப்பூசிக்காகவும் மற்றொன்று கோவிட் ஷாட்டுக்காகவும் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இரண்டு பூஸ்டர் தடுப்பூசிகளையும் பெறுவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!