உக்ரைன் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!

Zaporizhzhia அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக வெளியேறுமாறு உக்ரைன் புதனன்று அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து தாக்குவதாக ரஷ்யாவும் உக்ரைனும் போட்டி போட்டு குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் அணு பேரழிவு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.
    
இந்த நிலையில், துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவிக்கையில், ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள்.

உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு செல்ல வழி காணுங்கள் என சமூக ஊடகமான டெலிகிராமில் அவர் பதிவு செய்துள்ளார். இதனிடையே, அணுமின் நிலையம் அமைந்துள்ள Enerhodar நகரின் தலைமறைவான மேயர் இன்னொரு டெலிகிராம் பதிவில் தெரிவிக்கையில்,
ரஷ்ய துருப்புகள் தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருவதாகவும், தற்போது Enerhodar நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொதுமக்கள் மீதும் அணுமின் நிலையம் மீதும் தங்கள் தரப்பில் இருந்து தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை எனவும், உக்ரைன் துருப்புகளே அணுமின் நிலையம் மீது தாக்குதல் தொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!