சிபியை அரசியலில் இறக்கும் சத்யராஜ்?

சத்யராஜ் முதலீட்டில் அவரது மனைவி மகேஸ்வரி தயாரிக்கும் படம் சத்யா. மகன் சிபி ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ரம்யா நம்பிஸன், வரலட்சுமி ஹீரோயின். பிரதீப் இயக்குகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசும்போது,

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற சனம் படத்தின் ரீமேக்காக சத்யா உருவாகி இருக்கிறது. படத்துக்கு சத்யா என டைட்டில் வைக்கப்போவதாக கூறினார்கள். அது கமல்சார் நடித்த பட டைட்டில். கமல் எனது நண்பர்.

அவரிடம் டைட்டிலுக்கு அனுமதி கேட்டு அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த தயக்கமாக இருந்தது. பிறகு சிபியே அவரிடம் அனுமதி கேட்டார். உடனடியாக அனுமதி தந்துவிட்டார். இந்நிகழ்ச்சில் சிபி பேசும்போது யார் பெயரையும் மறந்துவிடாமல் பேசினார். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்போதே மேடை பேச்சுக்கு தயாராகி விட்டார். விட்டால் நேராக ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றுவிடுவார். ஆனால் இது இளவயசு அரசியல் பக்கம் செல்வதற்கு இன்னும் வயசு அதிகம் வேண்டும்’ என்றார். இவ்வாறு பேசிய சத்யராஜிடம்,’அப்படியென்றால் ஆர்.கே நகரில் சிபி தேர்தல் பிரசாரம் செய்வாரா என்று கேட்டபோது,’ஒரு ப்ளோவுக்காக அப்படிச் சொன்னேன். அவர் பிரசாரம் செய்ய மாட்டார்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,