வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்
பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதனால் படித்து முடித்த உடனே பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க முன்வருகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? என்பதை பார்ப்போம்!

இன்றைய சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர் களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்? என்பதை பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

* அலுவலகம் என்பது அனுபவித்தே ஆக வேண்டிய ஆயுட்கால சிறைச்சாலை அல்ல. மகிழ்ச்சியோடு ஒன்றிணைந்து ரசனையுடன் விரும்பி பணிபுரியும் அற்புதமான பூங்கா. அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே தவிர தனிப்பட்ட விருப்பங்களுக்கும், குடும்ப பிரச் சினைகளுக்குமான இடம் அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

* பழகக்கூடிய ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மன முதிர்ச்சி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவேண்டும், பொதுவாக ஆண்கள் பெண்களை கவர அன்பாக, மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வதுபோல் பேசுவார்கள்.

தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்கள் என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆண் எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பேசுகிறார் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தும், கண்களிலும் இருந்தும் நம்மால் தெரிந்துகொள்ள இயலும். அதைப்பொறுத்து அவருடனான உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* நம் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம்முடைய இரக்க குணத்தை சாதகமாக எடுத்துக் கொள்ளும் ஆண்களில் சிலர் தங்கள் மனைவியை பற்றி நம்மிடம் குறைத்துப்பேசுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. ஏன்என்றால் அது நம்மை ஏமாற்ற செய்த தந்திரம் என்பது பிற்காலத்தில்தான் தெரியவரும்.

* பிறர் கண்களை உறுத்தும் வண்ணம் உடையணிவதை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகள் தொல்லைகள் தரும் பட்சத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக் காமல் பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு, நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

* முக்கியமாக உடல்ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபரீதமாக இருக்கும். இதனால் நம் பெயர் கெடுவது மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி நம் அருமையான குடும்ப வாழ்க்கையையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,