தேர்தல் தொடர்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், தேர்தல் முறைமை சட்டங்களை திருத்துவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வதற்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை குறித்த அமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான பிரதிநிதிகளின் சில முன்மொழிவுகள் ஜனநாயகத்தின் அடிப்படை சாரத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு உதாரணங்களாக, பெரும்பான்மை கட்சிக்கு மேலதிக கொடுப்பனவு இடங்களை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

மேலும், உள்ளுராட்சி அதிகார சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதை போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போடக் கூடாது என அந்த அமைப்பு கோரியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!