ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தலான மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்.!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ஃபேஸ் சாதனத்தில் ஏஆர்எம் செயலி மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏஆர்எம் சார்ந்த ஹார்டுவேர் ஒன்றை தயாரித்து வருவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் சாதனத்தை வரும் வாரங்களில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப அமர்வில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

மைக்ரோசாஃப்ட் ரெட்மொன்ட் பகுதியில் ரேடியோ பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்துள்ளது அந்நிறுவனம், மேலும் தற்சமயம் ஹார்டுவேர் சார்ந்த பணிகள் நடைபெறுகிறது.

மைக்ரோசாஃப்ட் சமீபத்திய விளம்பரத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்தில் உள்ள எல்டிஇ பிரிவில் அனுபவமுள்ள பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,