மன்னர் சார்லஸின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் முக்கிய மருத்துவர் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி காலமானார். இந்த நிலையில் அவரது மகன் சார்லஸ் மன்னராக முடிசூட இருக்கிறார். இந்த நிலையில், அவரது சிவந்து போன வீங்கிய விரல்கள் குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
  
ராணியார் மறைவை அடுத்து வெளியான புகைப்படங்களிலேயே மன்னர் சார்லஸின் விரல்கள் வீங்கிப்போயுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமது 73வது வயதில் பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கிறார்.

இந்த நிலையில் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளரான டாக்டர் Gareth Nye தெரிவிக்கையில், விரல்களில் வீக்கம் காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் ஒன்று எடிமா என்பதாக இருக்கலாம் எனவும் எடிமா என்பது உடல் மூட்டுகளில் திரவங்களைத் தக்கவைக்கத் தொடங்கும் ஒரு நிலை, பொதுவாக கால்கள் மற்றும் கணுக்கால் ஆனால் விரல்களிலும் வீக்கம் ஏற்படுகிறது என்றார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாக காணப்படும் நிலை இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னொரு காரணம் கீல்வாதமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றார். 60 வயது கடந்தவர்களுக்கு பொதுவாக கீல்வாதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

விரல்கள் பொதுவாக விறைப்பாகவும், வலியுடனும் வீக்கமாகவும் காணப்படும், மேலும் மருந்துகள் வலிக்கு உதவினாலும், வீக்கம் அப்படியே இருக்கும் என்றார். பிரித்தானியாவின் புதிய மன்னருக்கு விரல் வீக்கம் காரணமாக ஆபத்து நேரும் என கூற முடியாது எனவும், இது பொதுவாக வயதானவர்களுக்கு காணப்படும் ஒன்றுதான் என குறிப்பிட்டுள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!