கோத்தா கைதுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிகிறது!

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.கோத்தபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ச தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பதற்கு பொதுமக்கள் பணம் கையாடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நீதவான் நீதிமன்றமொன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.தமக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச மனுவில் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு அமைய இன்று வரையில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.நினைவுத் தூபி அமைக்கும் நடவடிக்கையின் பொது சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை என ராஜபக்ச மனுவில் தெரிவித்துள்ளார்.அரசாங்க தரப்பு அரசியல்வாதிகளின் தூண்டுதலுக்கு அமைய தம்மிடம் பழிவாங்கும் நோக்கும் இவ்வாறு புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தொடர்ந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,