மட்டக்களப்பில் 10 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

மட்டக்களப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 10 பேரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் கூறியதாக எமது பிரந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவர்களிடமிருந்து முறைப்பாடுகள் தொடர்பான வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஒவ்வொருவருக்கும் திகதி குறிப்பிட்டு தமது காரியாலயத்துக்கு வருமாறு கடிதங்களை அவர்களது வீடுகளுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று கையளித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒவ்வொருவருக்கும் திகதி குறிப்பிட்டு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் குறிப்பிட்ட திகதிகளில் கொழும்பிலுள்ள காரியாலயத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்பட்வர்கள் பலபேர் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!