ரணில் செலுத்தும் நன்றிக்கடன்! சஜித் காட்டம்

திருடர்களுக்கும் பொய்யான ஏமாற்று அரசியலுக்கும் இடமளிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க இருப்பதாக கூறுகின்றார்கள். தற்போது இருக்கும் 20 அமைச்சரவை அமைச்சர்களையும் அந்த 12 அமைச்சர்களையும் அத்துடன் 37 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் 69 அமைச்சர்கள். இந்த 69 அமைச்சர்களை எதற்காக நியமிக்கின்றார்கள்?


ஜனாதிபதி நியமனத்தில் 134 வாக்குகளை பெற்றுக்கொடுத்தமைக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுகின்றது.அத்துடன் வெட்கம் இல்லாத கைப்பாவை அரசியல்வாதிகள் ராஜபக்சர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே பொதுமக்களுக்கான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றினையுங்கள்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!