யாழ். மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி!

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி நேற்று செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மேலதிக நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) உள்ளிட்டோர் அடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினர். கடந்தமாதம் 28ஆம் திகதி சாவகச்சேரி நகரசபைக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,