பிரபல நடிகரின் படத்தில் இருந்து விலகிய அமலாபால்!

நிவின்பாலி தமிழ், மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் இருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளார். 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். 80-களில் கேரளாவில் வாழ்ந்த ஒரு பயங்கர கொள்ளையனை பற்றிய கதை தான் காயம்குளம் கொச்சுண்ணி.

ஹீரோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் இருந்து திடீரென அப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளார். விலகியதற்கான காரணங்கள் தெரியவில்லை. அமலாபால் விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,