இடைநிறுத்தப்படுகிறதா அரச ஊழியர்களின் சம்பளம்..! வெளியானது அமைச்சரின் தகவல்

வரவு, செலவு திட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால், சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அரச நிதி முகாமைத்துவம் ஒழுக்கமுடையதாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்காக ஒருபோதும் அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்பட மாட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், மாத இறுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதும் ஓய்வூதியம் வழங்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!