வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி செலுத்த வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரில் மிகப்பெரிய கனமழை பெய்ததால் அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் நடவடிக்கைகளில் பெங்களூரு மாநகராட்சியை ஈடுபட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பெங்களூர் நகரில் இருக்கும் தீராத ட்ராபிக் பிரச்சினையையும் தீர்க்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து வீட்டின் வெளியே காரை நிறுத்தி இருந்தால் அந்த காருக்கு ரூபாய் 5000 வரி செலுத்த வேண்டும் என்று பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.வீட்டின் வெளியே நிறுத்தப்படும் கார்களால் தான் அதிக பிரச்சனை ஏற்படுகிறது என்பதை அடுத்தே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!