மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றையதினம் 07 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மசகு எண்ணெய்

86 டொலராக இருந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 டொலராகக் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் எண்ணெயின் குறைந்த விலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வட்டி வீதம்

அமெரிக்காவில் வரலாற்றில் அதிக வட்டி வீதம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!