450 ஆண்டுகளுக்கு முன்னரே ராணியார் மரணத்தை கணித்த பிரெஞ்சு மேதை!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக புதிய புத்தகம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராணியாரின் மறைவு தொடர்பில் ஒரு கவிதை வடிவில் பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. லண்டன் நகரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, ஹிட்லரின் எழுச்சி, இரண்டு உலக யுத்தங்கள், அதனால் ஐரோப்பாவுக்கு ஏற்படும் பேரழிவு என அவர் மொத்தமும் கணித்து வைத்துள்ளார்.
    
இந்த நிலையில், அவரது கணிப்புகளை ஆராய்ந்துள்ள Mario Reading என்ற புத்தக ஆசிரியரே, ராணியாரின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் 450 வருடங்களுக்கு முன்னரே கணித்துள்ளதை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

குறித்த தகவலை ராணியார் காலமான அன்று சமூக ஊடகங்களில் Mario Reading வெளியிட, அதுவரை வெறும் 8 புத்தகங்களே விற்பனையாகியிருந்த நிலையில், செப்டம்பர் 17ம் திகதி வரையில் 8,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006ல் முதன்முதலில் வெளியான இவரது புத்தகத்தில், ராணியாரின் மறைவு 2022ல் அவரது 96வது வயதில் நடக்கும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உக்ரைன் தொடர்பிலும், அதனால் பிரான்ஸ் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக Mario Reading தமது புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.

பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் 1566ல் இறக்கும் வரையில் மொத்தம் 6,338 கணிப்புகளை பதிவு செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் துல்லியமானவை என விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலக யுத்தம், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்சு புரட்சி, அணு ஆயுதம் உள்ளிட்டவை அவரால் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70% கணிப்புகள் நிஜமானதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மட்டுமின்றி, இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் இன்னொரு உலக யுத்தத்தை எதிர்கொள்வார்கள் என அவர் கணித்துள்ளதாக நம்பப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!