குழந்தை திருடன் என நினைத்து அரசு அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள்!

குழந்தை திருடன் என நினைத்து, கிராமத்தினர் அரசு அதிகாரிகளை தாக்கினர்.விஜயபுராவின் ஹிரேபேவனுார் கிராமத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதாக, குவாரி மற்றும் நில அறிவியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரில் இருந்து அதிகாரிகள் நேற்று ஹிரேபேவனுார் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களை பார்த்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாரிகளிடம், என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.
    
அதற்கு அதிகாரிகள் சரியான பதிலை சொல்லவில்லை. இது விவசாயிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் குழந்தைகள் திருடர்களாக இருக்கலாம் என நினைத்து, கிராமத்தினரை சத்தம் போட்டு வரவழைத்தார்.அங்கு வந்த கிராமத்தினரும், விவசாயிகளின் பேச்சை கேட்டு, அதிகாரிகளை சராமாரியாக அடித்தனர். அதன்பிறகு அவர்கள் அதிகாரிகள் என்பது தெரியவந்து, மன்னிப்பு கேட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!