பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்: மைத்திரி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக நினைத்து பார்க்க முடியாத குடும்பங்களின் யுவதிகள் கூட பெருமளவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.இலங்கையில் எப்போதும் இப்படியான அரிசி மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கி உள்ளனர். இலங்கை எப்போதும் இப்படி அரசி தட்டுப்பாடும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமை மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.

பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சினை மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினையாக மாறியுள்ளது. வறிய மக்களும் நடுத்தர குடும்பங்களும் உணவு தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.  நாட்டின் வெல்வந்தர்களுக்கு இந்த நிலைமை ஏற்படாது.
பெருகி வரும் போதைப் பொருள் வியாபாரம்

ஒரு புறம் போதைப் பொருள் வியாபாரம் பாரதூரமான அளவில் பெருகி வருகிறது. அந்த வியாபாரத்தை ஒழிக்க அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறை்படுத்துவதாக தெரியவில்லை.

அதேபோல் எண்ணிப்பார்கக முடியாத குடும்பங்களை சேர்ந்த யுவதிகள் பெருமளவில் பாலியல் தொழிலை நோக்கி செல்வதாக பொலிஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினார். இந்த நாடு எந்த திசையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் சிங்கள பௌத்த நாடு. மறுபுறம் தமிழ்,முஸ்லிம் என அனைத்து இனங்களும் ஐக்கியமாக வாழும் நாடு. இவ்விதமாக சென்றால், உணவை பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வந்தர்களான சிறிய தரப்பினர் மாத்திரம் எஞ்சி, வறிய மக்கள் உட்பட ஏனையோர் மரணித்து விடுவர் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!