கனடாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள மியான்மார் அழ­கு­ராணி!

மியன்­மாரின் இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களை விமர்­சித்த அந்­நாட்டு அழ­கு­ராணி ( Han Lay) , கன­டாவில் அர­சியல் தஞ்சம் பெற்­றுள்ளார். 23 வய­தான தாவ் நந்தார் ஆங் எனும் இந்த யுவதி, ஹான் லே ( Han Lay) எனவும் அழைக்­கப்­ப­டு­கிறார். 2020 ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் மியன்மார் அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டவர். 2021 ஆம் ஆண்டு தாய்­லாந்தில் நடை­பெற்ற மிஸ் கிராண்ட் இன்­டர்­நெ­ஷனல் அழ­கு­ராணி போட்­டியில் தாய்­லாந்து சார்­பாக அவர் ( Han Lay) பங்­கு­பற்­றினார்.
    
மியன்மார் இரா­ணுவ ஆட்­சியை ஹான் லே விமர்­சித்து வந்தார். மியன்­மாரின் ஆங் சான் சூகி தலை­மை­யி­லான ஜன­நா­யக அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்டு, ஒரு மாதத்தில் மிஸ் கிராண்ட் இன்­டர்­நெ­ஷனல் போட்டி தாய்­லாந்தில் நடை­பெற்­றது.இப்­போட்டி மேடை­யையும் மியன்மார் இரா­ணுவப் புரட்­சியை விமர்­சிப்­ப­தற்கு ஹான் லே பயன்­ப­டுத்திக் கொண்டார். நிகவில் அவர் கூறுகையில்,

‘உல­கி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜை­களும் அவர்­களின் நாட்டின் சுபீட்­சத்­தையும் அமை­தி­யான சூழ­லையும் விரும்­பு­கின்­றனர். இன்று நான் இந்த மேடையில் இருக்­கும்­போது, எனது மியன்மார் நாட்டில் நூற்­றுக்கும் அதி­க­மானோர் இறந்­துள்­ளனர். தமது உயிரை இழந்த அனைத்து மக்­க­ளுக்­கா­க­கவும் நான் வருந்­து­கிறேன்’ எனக் கூறி கண்­ணீர்­சிந்­தினார் ஹான் லே ( Han Lay).

அதை­ய­டுத்து, அவரை கைது செய்­வ­தற்கு தாய்­லாந்து அதி­கா­ரிகள் பிடி­வி­றாந்து பிறப்­பித்­தி­ருந்­தனர். ஆனால், மியன்­மா­ருக்குத் திரும்­பாமல் அவர், தாய்­லாந்­தி­லேயே அவர் ( Han Lay) தங்­கி­யி­ருந்தார். தாய்­லாந்தில் தங்­கி­யி­ருக்கும் காலத்தை நீடித்துக் கொள்­வ­தற்­காக அவர் தாய்­லாந்­தி­லி­ருந்து வெளி­யேறி மீண்டும் வர வேண்­டி­யி­ருந்­தது.

இந்­நி­லையில், வியட்­நா­முக்குச் சென்ற அவர், கடந்த 21 ஆம் திகதி தாய்­லாந்தின் பேங்கொக் விமான நிலை­யத்­துக்கு திரும்­பி­ய­போது தாய்­லாந்து குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் ( Han Lay) தடுக்­கப்­பட்டார்.தனக்கு எதி­ராக பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளதால் தாய்­லாந்­துக்குள் நுழை­வ­தற்கு தன்னை தாய்­லாந்து அதி­கா­ரிகள் அனு­ம­திக்­க­வில்லை எனவும் இதனால் பேங்கொக் விமான நிலை­யத்தில் தான் நிர்க்­க­தி­யாக உள்­ள­தா­கவும் ஹான் லே ( Han Lay) கூறி­யி­ருந்தார்.

அதோடு ஐ.நா. அதி­கா­ரி­களின் உத­வி­யையும் அவர் நாடி­யி­ருந்தார். மியன்மாருக்கு ஹான் லே ( Han Lay) திருப்பி அனுப்பப்பட்டால், அவர் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தாய்லாந்து கிளையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.இவ்வாறான நிலையில் ஹான் லே ( Han Lay)கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!