உக்ரைன் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் விழாவிற்கு முன்னர், உயிருக்கு அஞ்சி வெளியேறிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் குறைந்தது 23 பேர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சபோரிஜியாவில் இந்த பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் வெளியான புகைப்படங்களில், உடல்கள் சிதறிக்கிடப்பதும் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சபோரிஜியா ஆளுநர் Oleksandr Starukh தெரிவிக்கையில், எதிரிகள் கை ஓங்கியுள்ளது, புறநகர் பகுதியில் ரோக்கெட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 28 பேர் காயங்களுடன் தப்பியதாகவும், பொதுமக்கள் மீதே இந்த கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குறித்த பகுதியில் சிக்கியுள்ள குடும்பங்களை பாதுகாப்பு கருதி வெளியேற்ற முயன்ற வாகனங்கள் மீதே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுமையாக விமர்சித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரத்தவெறி கொண்ட அயோக்கியர்கள் அவர்கள் என சாடியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!