சீனாவுக்கு விற்கப்பட்ட இராணுவத்தின் காணி!

கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக காணி சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரர்ணுவத் தலைமையக காணியின் ஒரு பகுதி சீனாவுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவின் ஷங்கிரிலா நிறுவனத்திற்கே இந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் நாட்டின் ஒரு சிறிய பகுதியேனும் வேறு நாட்டிற்கு சொந்தமாக வழங்கப்படவில்லை என மஹிந்த தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இராணுவம் தலைமையகம் விற்பனை செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை ஊடகமொன்று பகிரங்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!