பொருளாதார நெருக்கடி தொடர்பான பொறுப்பை ஒரு அரசாங்கம் மீது சுமத்த முடியாது-பந்துல குணவர்தன

பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக வரலாற்றில் இருக்கும் புள்ளி விபரங்களை பரிசோதிக்கும் போது, அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஒன்றின் மீதோ அதன் தலைவர்கள் மீது மாத்திரமோ சுமத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோருக்கு எதிரான பொருளாதார குற்றம் தொடர்பான மனுக்களை விசாரிப்பது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களும் பொறுப்புக் கூற வேண்டும் அல்லவா?

ஊடகவியலாளர்- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட மேலும் சிலருக்கு எதிரான பொருளாதார குற்றம் தொடர்பான மனுவை விசாரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தீர்கள். அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புமிக்கது. அப்படியானால், இதற்கு நீங்களும் பொறுப்புக் கூற வேண்டும் அல்லவா? நான் நான் நீதிமன்ற தீர்ப்பை கேட்கவில்ல. நீங்களும் பொறுப்புக்கூற வேண்டும் அல்லவா என்றே கேட்கின்றோன்.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் பதில்– நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும்.நீதிமன்றம் வழங்குத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

பொருளாதாரம் மற்றும் அதன் தன்மை குறித்து பார்க்கும் போது. ஏற்பட்டள்ள நிலைமை தொடர்பில் பொருளாதார அறிவியல் புரிதல் இருந்தால், அது பற்றிய வரலாற்றில் இருக்கும் புள்ளி விபரங்களை ஆராய்ந்தால், பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை ஒரு அரசாங்கத்தின் மீதோ, அதன் தலைவர்கள் மீதோ சுமத்த முடியாது என்பதே எனது தனிப்பட்ட பொருளாதார அறிவியல் ஆராய்வு. அப்படி செய்ய முடியும் என்று தனிப்படட ரீதியில் நம்பமாட்டேன் என பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!