கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கல்வி அமைச்சின் இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக பொழுதுபோக்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!