மீண்டும் நாளை மேடையேறுகிறார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அவர் பொது அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது. இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி நகரில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. அதேவேளை,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல மு‍டிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!