டக்ளஸ் மீது தாக்குதல் – இருவருக்கு 22 வருட கடூழிய சிறை தண்டனை!

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இன்று தீர்ப்பளித்தார்.
    
குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் எம்.பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
    

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!