இலங்கையின் படிப்பறிவு மட்டத்தில் ஏற்படவுள்ள ஆபத்து

கொழும்பு மாவட்டத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் 50 வீதமான பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பாடசாலை சுகாதாரப் பிரிவின் தலைவர் மருத்துவர் ஆயிஷா லொகுபாலசூரிய தெரிவித்துள்ளார். உணவுப் பற்றாக்குறை, பெற்றோர்கள் வேலைக்குச் செல்வது, போக்குவரத்துக் கட்டணம், பாடசாலை உபகரணங்களின் விலை ஆகியவையே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மோசமாகும் எதிர்காலம் 

இந்த நிலை மற்ற பாடசாலைகளிலும் ஏற்படக்கூடும் என்றும், இது நாட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.கொழும்பில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி நாடு பூராகவும் கல்வி அமைச்சினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லொகுபாலசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் கல்வி அறிவு

இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் இலங்கையில் வயது வந்தோரின் கல்வியறிவு வீதத்தை பாதிக்கலாம் என கல்வித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வயது வந்தோருக்கான கல்வியறிவு விகிதம் என்பது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய சுருக்கமான எளிய அறிக்கைகளைப் படிக்கவும், எழுதவும் மற்றும் புரிந்துகொள்ளவும் முடியும் என்பதனை கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!