மக்­க­ளுக்கு முன் பறந்து வந்த பழைய இரும்பு வியா­பா­ரி­கள்!!

வலி. வடக்­கில் நேற்று பொது மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தும் மக்­க­ளுக்கு முன் பழைய இரும்பு சேக­ரிப்­பா­ளர்­கள் புகுந்து அங்கு கிடந்­த­வற்­றை­ யெல்­லாம் அள்­ளிக்­கட்டிக்­கொண்டு சென்­ற­னர்.

மக்­கள் தமது வீடு­க­ளைக் காணி­க­ளைப் பார்க்­கச் சென்­ற ­போது அவர்­க­ளின் எதிரே பழைய இரும்­பு­கள், பாத்­தி­ரங்­கள், பித்­த­ளை­க­ளு­டன் இவர்­கள் வந்­து­கொண்­டி­ருந்­த­னர்.

மோட்­டார் சைக்­கிள்­கள், லான்ட் மாஸ்­டர்­கள் என்­ப­வற்­றில் வந்து இவர்­கள் இரும்­புப் பொருள்­க­ளைத் திரு­டிச் செல்­வ­தில் மும்­மு­ர­மாக இருந்­த­னர். இப்­போதே இப்­ப­டி­யென்­றால் வரும் நாள்­க­ளில் இந்­தப் பகு­தி­க­ளில் திருட்டு அமோ­க­மாக இருக்­கும் என்­கிற அச்­சத்­தில் மக்­கள் உறைந்து போயி­னர்.

நேற்­றைய தினம் வலி. வடக்­கில் இரா­ணு­வக்­கட்­டுப்­பாட்­டில் மயி­லிட்­டி-­கட்­டு­வன் வீதி­யில் வடக்­குப்­பு­ற­மாக இருந்த 683 ஏக்­கா் காணி­கள் மக்­கள் பாவ­னைக்­காக நேற்­றை­ய­தி­னம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்த காணி விடு­விப்பு நிகழ்வு நடந்­து­கொண்­டி­ருக்­கும் போதே வேறு­டங்­களை சோ்ந்த பலா் மோட்­டார் சைக்­கிள்­க­ளி­லும் வாக­னங்­க­ளி­லும் வேக­மாக நுழைந்­த­னர். கண்­ணில் அகப்­பட்ட பழைய இரும்பு, பித்­தளை மற்­றும் பொருள்­களை அள்­ளிக்­கொண்டு புறப்­பட்­ட­னர்.

நிகழ்வு முடிந்து தமது காணி­க­ளைப் பார்­வை­யி­டு­வ­தற்­கா­கத் வந்த மக்­கள் தமது கண் முன்­னால் நடை­பெ­றும் இந்­தத் திருட்­டைக் கண்டு விக்­கித்­துப்­போ­யி­னர். இரும்­புக்­கம்­பி­கள், பைப்­கள், காணி உாிமை­யா­ளா்­கள் விட்­டுச்­சென்ற பெறு­ம­தி­மிக்க பொருள்­கள் என்று எல்­லா­வற்­றை­யும் அவர்­கள் அள்­ளிச் செல்ல, எது­வும் செய்ய முடி­யா­த­வர்­க­ளா­கப் பார்த்து நின்­றி­னர்.

‘‘ நாங்­களே 28 வரு­டங்­க­ளின் பின்­னா் எமது காணி­களை காண்­ப­தில் சந்­தோ­சத்­தில் வரு­கின்­றோம். அதற்­குள் இவா்­கள் தமது வேலை­யைக் க◌ாட்­டி­விட்­ட­னர். இனி­வ­ரும் நாள்­க­ளில் வீடு­க­ளில் எஞ்­சிக் கிடக்­கும் ஒன்­றி­ரண்டு பொருள்­கள்­கூ­டக் கிடக்­காது என்று அச்­ச­மாக இருக்­கின்­றது. இதற்கு உட­ன­டி­யாக உரி­ய­வா்­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்” என தெரி­வித்­த­னா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!