ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மூவர் நேற்றே விடுதலை!

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பயங்கர பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.பொது மன்னிப்பு வழங்கப்பட்ட எண்வரின் 4 பேர் சட்ட சிக்கல் காரணிகளினால் சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர்.

இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் 09 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.மிகுதியாகவுள்ள ஒருவரையும் விரைவில் விடுதலை செய்யுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!